தொடர்புக்கு

infonews2world@gmail.com

facebook.com/news2world

சூடானா பதிவுகள் விளம்பர இணைப்புகள்

Recent Posts Widget | Nichcu Network

புதிய திரைப்படங்களை பார்க்க இப்போதே கிளிக் பன்னுங்க‌

More than a Blog Aggregator

Saturday, 12 May 2012

ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிட்டல் விடுத்த தனியார் பல்கலைக் கழக பெண் ஊழியர் கைது

jayalalitha, வெடிகுண்டு மிரட்டல், பெண், ஜெயலலிதாதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில், ஸ்ரீவில்லிபுதுத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் இருந்து இந்த மிரட்டல் விடப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் அந்த தனியார் பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்கு இயங்கி கொண்டிருந்த 17 கம்ப்யூட்டர்களை திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் நாச்சிமுத்து என்ற முகமதுகான் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கு அக்வுண்ட்டாக பணியாற்றும் ராமசந்திரபுரத்தை சேர்ந்த வசந்தா(28) என்பவர் அதை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது.

வசந்தாவுக்கும் அவரது கணவர் நாச்சிமுத்துவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இவ்வாறு அவர் தவறு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரிலும், சென்னை சைபர் கிரைம் போலீசார் கொடுத்த புகார் மூலமும் வசந்தா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வசந்தாவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்ற நீதித்துறை நடுவர் எண் 2 ல் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Read more »

சிறையிலடைத்து என்னை நேரடி அரசியலில் குதிக்க வைத்துவிட்டார் ஜெ. - எம். நடராஜன்


tamil movies,tamil cinema,tamil nadu
மறைமுக அரசியலில் இருந்த தம்மை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் நேரடி அரசியலுக்கு இழுத்துவிட்டார் ஜெயலலிதா என்று எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.


நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.



சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.



எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்தது நானும் எனது மனைவியும்தான். நாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை. துரோகமும் செய்யவில்லை. அதிமுகவை உடைக்கவும் முயற்சிக்கவில்லை.



சசிகலாவை மறைமுகமாக மிரட்டி அவர் பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்தான் தமக்குத் தெரியாமல் தமது குடும்பத்தினர் தவறு செய்ததாக கூறப்பட்டது. என்னை சிறையில் அடைத்து மறைமுக அரசியல் செய்து கொண்டிருந்த என்னை நேரடி அரசியலுக்கு வரவழைத்துவிட்டார் ஜெயலலிதா என்றார் அவர்.

Read more »

ஓமன் அருகே 11 இந்தியர்களுடன் எண்ணை கப்பல் கடத்தல்


Oil tanker hijacked,Arabianலைபீரியா நாட்டின் எண்ணைக் கப்பலான ஸ்மிர்னி, 1.35,000 டன் எண்ணையோடு சோமாலியா சென்று கொண்டிருந்தது. தனது இரண்டாவது பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பலில் இந்தியர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுமாக மொத்தம் 15 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள் ஆவர்.

இந்த கப்பல் ஓமன் நாட்டுக்கு அருகே வந்த போது சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன. அங்குள்ள நேரப்படி பகல் 11.50 மணியளவில் கப்பலில் இருந்து வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கப்பலின் நிறுவனம் கூறியுள்ளது.

அந்த பகுதியில் வரும் கப்பல்களை அங்குள்ள கடல் கொள்ளைக்காரர்கள் கப்பலை கடத்தி பல மில்லியன் டாலர்கள் பெறுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை‌ ‌தொடர்ந்து கடத்தப்பட்டவர்களையும் கப்பலையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்குவதற்கு இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கூட்டுப்பாதுகாப்பு ரோந்துப் படையை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Read more »

வராத ஹீரோக்கள்... வருந்தாத சினேகா

sneha prasanna wedding photosஇளவரசியின் கல்யாணம் புன்னகை சூழ முடிந்துவிட்டது. பல்லக்கில் ஏற்றி வந்து பரவசப்படுத்திவிட்டார்கள் அவரை. சினேகாவின் சிரிப்பு வெளிச்சத்தின் முன் அங்கிருந்த ஆர்ட்டிபிஷியல் விளக்குகள் எல்லாம் வெட்கப்பட்டு கண்ணை மூடிக் கொள்கிற அளவுக்கு சந்தோஷமோ சந்தோஷம்!

இரு வீட்டார் சம்மதத்தோடு பாரம்பரிய முறையில் நடந்த இந்த திருமணத்திற்கு உலகம் முழுக்க இருக்கிற சினேகா-பிரசன்னா ரசிகர்கள் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளூரில் இருக்கும் ஹீரோக்கள் மனசு என்ன நினைத்ததோ, சொல்லிக் கொள்ளும்படி ஒருவர் கூட இந்த திருமணத்திற்கு வரவில்லை என்பதுதான் பலத்த சோகம். (அவருக்கல்ல, நமக்கு)

ஷாம் தொடங்கி கமல் வரைக்கும் அநேகமாக எல்லா ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார் சினேகா. ஆனால் சொல்லி வைத்த மாதிரி இவர்கள் யாருமே திருமணத்திற்கு நேரில் வரவில்லை. ஆட்டோகிராப் படத்தில் முக்கியமான ரோலில் சினேகாவை நடிக்க வைத்த ஹீரோ சேரன் மட்டும் இந்த 'வராதவர்கள்' லிஸ்ட்டிலிருந்து விடுபட்டிருந்தார்.

சக நடிகர் நடிகையின் திருமணம். நேரில் வாழ்த்தியிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்? எது எதற்கோ நேரத்தை செலவிடும் ஹீரோக்கள் இதற்கும் கொஞ்சம் நேரத்தை செலவிட்டிருக்கலாமே?

Read more »

Friday, 11 May 2012

அகதிகள் குடிவரவு சட்டமாற்றம்?எதிர்கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தார் கென்னி

tamil moviesகனடா நாட்டிற்குள் பெரிய கப்பல்கள் மற்றும் படகுகளில் கூட்டமாக வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் புதிய C-31 சட்டமூலம் ஒன்றினை குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி அறிவித்திருந்தார். புதிய சட்டங்களின் படி கூட்டமாக வருபவர்களின் அகதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்றும் அவர்கள் கனடிய சிறைகளில் அடைக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை என்.டி.பி, லிபரல் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், கனடிய மக்களும் கடுமையாக எதிர்த்தனர்.

பெரும்பாலான மக்கள் இந்த சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த மாற்றங்களின் படி எதிர்காலத்தில் கூட்டமாக கனடாவிற்குள் வரும் அகதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாலும் அவர்களின் கோரிக்கை மனுக்க்களை 14 நாட்களில் குடிவரவுத் துறை பரிசீலிக்கத் தொடங்கும். ஆறு மாதங்களுக்குள் அரசின் பரிசீலனைகள் முடிவுக்கு வரும் எனவும் தெரிய வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கப்பல்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான தமிழ் அகதி மக்களின் கோரிக்கைகளும் இது போன்றே பரிசீலிக்கப்பட்டு நல்லதொரு முடிவு காணப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன் அகதிகளாக நாட்டினுள் வந்து நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை திரும்பப் பெற குடிவரவுத் துறையினால் முடியாது எனவும் C-31 சட்டமூல மாற்றங்களில் கூறப்பட்டுள்ளது. போலியாக குடியுரிமை பெற்றவர்களை மட்டுமே அரசினால் தண்டிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

இப் புதிய மாற்றங்களுக்குப் பின்னர் கொடுக்கப்பட்டுள்ள 14 நாட்கள் கால அவகாசம் மிகக் குறுகியது எனவும் இதற்குள்ளாக அகதியாக வந்த ஒருவர் அவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவது சிரமம் என்பதால் இந்த கால வரையறை நீடிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

Read more »

தி டர்ட்டி பிக்சர் படத்தில் நயன்தாரா!

nayantara, silk smitha, நயன்தாரா, சில்க் ஸ்மிதா
இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகிறது.

இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. அனுஷ்கா, நிகிதா, ரிச்சா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.

Read more »

பிரித்தானியாவின் BAFTA விருதுக்கான கருத்து வாக்கெடுப்பில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ முன்னிலை

sri lankan newsபிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.

பிரித்தானியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி 1954ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் துறை சார்ந்த சிறந்த படைப்புகளுக்கு BAFTA விருதுகளை வழங்கி வருகிறது.

2012ஆம் ஆண்டுக்கான BAFTA விருதுக்கு, சமகால விவகாரங்கள் குறித்த பிரிவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ உள்ளிட்ட 4 ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரேடியோ ரைம்ஸ் இணையத்தளத்தில் இந்த நான்கு ஆவணப்படங்கள் தொடர்பாகவும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த அல்ஜெசீரா தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்துக்கும், சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்கும் இடையில் கடந்த பல நாட்களாக கடும் போட்டி நிலவி வந்தது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு இதில் இரண்டாம் இடமே கிடைத்திருந்தது. ஆனால் தற்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் முன்னிலை பெற்றுள்ளது.

சிறிலங்கா- இந்திய நேரம் இன்று காலை 5.40 மணி நிலவரப்படி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு 1,774,070 வாக்குகளும் (50.01 வீதம்), அல்ஜெசீரா தயாரித்த பஹ்ரெய்ன் தொடர்பாக ஆவணப்படத்துக்கு 1,769,159 வாக்குகளும் (49.87 வீதம்) கிடைத்துள்ளன.

இந்த இணையத்தள வாக்கெடுப்பு விருதுக்கான தெரிவைத் தீர்மானிக்காது. நடுவர்களே அதனைத் தீர்மானிப்பர். ஆனாலும் வாசகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் பங்கேற்று வாக்களிக்கலாம்.

Read more »

நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!


sneha, prasanna, sneha marriage, சினேகா, பிரசன்னா, திருமணம், prasanna marriageநடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர். 

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

Read more »

உதயக்குமார் போராட்டத்தில் திடீர் திருப்பம்... அத்தனை பெண்களும் ஒட்டுமொத்தமாக விலகல்!

கூடங்குளம், kudankulam, உதயக்குமார், போராட்டம், பெண்கள், udayakumar
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து திடீரென பெண்களும், கிராம மக்களும் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையில் உதயக்குமார் இறங்கியுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் போராட்டத்தை தற்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இடிந்தகரையில் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்று ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் உதயக்குமார் அறிவித்திருந்தார். இதையடுத்து இடிந்தகரை, கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை ஜூன் 7ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடிந்தகரைக்கு யாரும் வந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை கிராமங்களின் எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் எதிர்பார்த்தபடி யாரும் வர முடியாமல் போய் விட்டது.

இதையடுத்து அந்தந்த கிராமங்களிலேயே பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 9 கிராமங்களில் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் இடிந்தகரை போராட்டத்திலிருந்து பெண்கள் அனைவரும் திடீரென விலகி விட்டனர். யாரும் இன்று அங்கு வரவில்லை. இதனால் வெறும் 25 பேர் மட்டுமே தற்போது உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் கூடியுள்ளனர்.

தற்போது நடந்து வரும் போராட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு வெடித்ததால்தான் பெண்கள் வாபஸ் பெற்று விட்டதாக தெரிகிறது. இந்த சோதனை போதாது என்று ஆங்காங்கே கிராமங்களில் நடந்து வந்த போராட்டமும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் உதயக்குமார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளார். மக்களே போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பதால் உதயக்குமாரின் போராட்டம் தொடருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவாரா அல்லது வாபஸ் பெறும் முடிவை எடுப்பாரா என்பது தெரியவில்லை.

Read more »

சின்னத்திரை காதல் ஜோடிகள் - சில சுவாரஸ்யமான அனுபவங்கள்!


சின்னத்திரை, serials, television
சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்னத்திரையில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்கள், செய்தி வாசிப்பாளர்கள் அதே துறையை சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சில காதல் ஜோடிகளின் சுவாரஸ்யமான அனுபவங்களை தட்ஸ் தமிழுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரஜின் சாண்ட்ரா

சன் மியூசிக் சேனலில் காம்பயராக கலக்கிய பிரஜின், சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். முதலில் காதலை சொன்னவர் சாண்ட்ராதானாம்.

பிரஜின் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு காதலை சொல்ல அவரும் சாண்ட்ராவின் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு காதலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அவர்களுடைய காதல் ஒரு சுபமுகூர்த்த நாளில் சுபமாகியிருக்கிறது. இந்த ஜோடி இப்பொழுது பெரிய திரையில் ஜோடியாக வலம் வர இருக்கிறார்கள்.

மோனிகா சாம்

சன் செய்திகளில் வானிலை அறிக்கை சொன்ன மோனிகா, சன் குழும தொலைக்காட்சிகளில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். புதிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தொடக்கவிழாவில் தனது காதலரை சந்தித்துள்ளார்.

சஞ்சீவ் ப்ரீத்தி

திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த நேரம். ப்ரீத்தி சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தார்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் புகழை அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆட வந்த போது சஞ்சீவுடன் காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுபயோக சுபதினத்தில் ப்ரீத்தியை கை பிடித்தார். ப்ரீத்தி இல்லத்தரசியாக இருக்க சஞ்சீவ் இன்னமும் திருமதி செல்வத்தில் செல்வமாக தொடர்கிறார்.

இப்படி மேலும் பற்பல காதல் ஜோடிகள் டிவி பெட்டிக்குள் உலா வந்து கொண்டுதான் உள்ளன. காதலுக்குத்தான் எல்லை இல்லையே.. அது சின்னத் திரை, பெரிய திரை என்று பார்த்தா வரப் போகிறது...!

Read more »

ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்



ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

sneha prasanna wedding photos ,sneha prasanna marriage pics

sneha prasanna wedding photos ,sneha prasanna marriage pics




ஸ்னேகா திருமண படங்கள்




ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்


sneha prasanna marriage pics

ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

Read more »

Thursday, 10 May 2012

சகவாழ்வு வேண்டாம்! தனிவாழ்வு வேண்டும்!! கோரிக்கையை முன்வைக்கும் ஈழத் தமிழர்கள்!! – தினமணி

இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கணிக்கப்பட்டு, அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதனாலேயே தமிழர்கள் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

எனவே ஈழக் கோரிக்கைக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாகப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இதனாலேயே சகவாழ்வு வேண்டாம், தனிவாழ்வுதான் இதற்குச் சரியான தீர்வு எனத் தமிழர்கள் ஈழக் கோரிக்கையை எழுப்பினர்.

லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி.

வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது.

வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள்.

இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.

அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.

ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.

1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர்.

ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.

இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.

இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.

தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது.

இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர்.

இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை.

கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம்.

யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.

இந்தியா, சீனா போர் நடக்கும் போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.

வங்கதேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது.

வங்கதேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன் தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.

இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது.

அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது.

இராணுவத் தளவாடங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.

ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.

தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார்.

இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.

இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.

Read more »

தனி ஈழம் கேட்கக் கூடாது-மதுரையில் சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு!


sushma swaraj, சுஷ்மா சுவராஜ், பாஜக, bjpதமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது முழுக்க, முழுக்க தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளத்தான்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்று இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்தோம். பின்னர் இலங்கை அதிபரிடம் இது தமிழர்களின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்சினை என்று கூறினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இங்கிருக்கும் தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கவேண்டியது உள்ளது. அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இணையான சம உரிமைகள், கெளரவமான வாழ்க்கை வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வு அமலாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது.

எனவே தமிழர்கள் மத்தியில் நல்ல ஆதரவும், மதிப்பும் பெற்றுள்ள ஒரு தலைவர் அப்படிக் கூறுகையில், இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தமிழ் ஈழத்தை வலியுறுத்த வேண்டும்?.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை எப்படி மதிக்கப்படுகிறதோ அதேபோலத்தான் நாம் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும்.

இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இது எம்.பிக்கள் மேற்கொண்ட சுற்றுலாப் பயணம் அல்ல. நாங்கள் அங்கு சந்தித்த அத்தனை பேரும் தங்களது பிரச்சினைகளை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எங்களிடம் தெரிவித்தனர்.

நான் ராஜபக்சேவை சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையுடன் உள்ளதாக உறுதிபடத் தெரிவித்தேன்.

இலங்கை தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக பாராளுமன்றத்தில் தெரிவித்தேன்.

இலங்கை அதிபர் ராஜபக்சே எனக்குக் கொடுத்த பரிசுப் பொருளை பெரிய விவகாரமாக்கி ஒரு பத்திரிக்கை என்னை சிறுமைப்படுத்தி விட்டது. அந்தப் பரிசு இந்திய ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறிய கெளரவம். அதை நான் சுஷ்மா சுவாராஜாக வாங்கவில்லை. மாறாக இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் வாங்கினேன். மேலும் அதனை நாடாளுமன்ற கருவூலத்திலும் சேர்த்து விட்டேன். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை.

Read more »

பென் ட்றைவின் (Pen Drive) வேகத்தை அதிகரிக்க இலகு வழி

pen drive,news2world.com,tamil movies,tamil cinemaஉங்கள் பென் ட்றைவ் மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.

முதலில் பென் ட்றைவை கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E)
அதன் பின்னர் Pen Drive இல் Right Click செய்து “Properties” செல்லுங்கள்.
tech news,www.news2world.com,news2world

அடுத்து வரும் விண்டோவில் Hardware Tab ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் Name என்பதற்கு கீழ் உங்கள் பென் ட்றைவ் இனை தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் கீழ் உள்ள Properties என்பதை கிளிக் செய்யுங்கள்
Pen Drive,tech news,tamilnews,news2world.com
அடுத்து வரும் விண்டோவில் Change Setting என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் Policies என்னும் Tab ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் வரும் விண்டோவில் “Better performance” என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவும் தான். இப்போது உங்கள் பென் ட்றைவ் முன்னரை காட்டிலும் வேகமாக இயங்கும்.

குறிப்பு : பென் ட்றைவை கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.


உதவிக்கு இந்த வீடியோவை பாருங்கள் Speed Up Your PenDrive


Read more »

லண்டன் ஒலிம்பிக்ஸ்: கிரீஸில் ஜோதி ஏற்றப்பட்டது


 London 2012 torch relay and Olympic GamesOlympic,Olympic 2012,Olympic torch2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெறுவதை ஒட்டி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.லண்டனில் வரும் ஜூலை மாதம் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பதினைந்து நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன.

ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக மே 10 ம்நாள் வியாழக்கிழமை கிரீஸில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கியதை நினைவு கூறும் விதமாக, கிரீஸ் நாட்டில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.

பழமைவாய்ந்த விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள ஹீரா ஆலயத்தில் இந்த விழா நடைபெற்றது. சூரிய ஒளிக் கதிர்களை நேரடியாக கிண்ண வடிவ கண்ணாடியில் விழச்செய்து அந்த ஒளியில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. ஒலிம்பியா கிராமத்திலிருந்து பல நாடுகள் வழியாக பயணம் செய்ய உள்ள இந்த ஒலிம்பிக் ஜோதி, இறுதியாக 70 நாட்கள் கழித்து லண்டனை அடைய உள்ளது.

இன்று தொடங்கும் இந்த ஓட்டம் மே 18 ம் தேதி இங்கிலாந்தை சென்றடைகிறது. பின்னர் நாடு முழுவதும் 70 நாட்களுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணம் செய்யும். இந்த சுடர் 2900 கிலோ மீட்டர்கள் அதாவது 1800 மைல்களை கடக்கிறது. 500 விளையாட்டு வீர்ர்கள் இந்த சுடரை ஏந்திச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

ராமன் தேடிய சீதை... - 'பீட்சா' மீது ஆசை!


tamil movies,tamil cinema ,tamil movies,tamilcinemaஊறுகாய் டப்பாவுல அல்வாவை அடைச்சு வச்ச மாதிரி சுர்ருன்னுதான் இருக்கார் ரம்யா நம்பீசன். நம்மளோட ஈசன் யாருன்னே தெரியல. அதுக்குள்ளே அவரு இவருன்னு எதையாவது எழுதி வச்சிராதீங்க என்று மீடியாவிடம் கையெடுத்து கும்பிட்டது அல்வா. இடம்- பீட்சா படத்தின் பிரஸ்மீட்.

ராமன் தேடிய சீதை, முரண் ஆகிய இரண்டு படங்கள் அண்மையில் வந்திருந்தாலும், ரம்யா நம்பீசனுக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கப் போகிற படமாக 'பீட்சா' இருக்கும் போலிருக்கிறது. ஏனென்றால் இப்படம் காதலும் த்ரில்லரும் கலந்த திரைப்படமாம். அதுமட்டுமல்ல, படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நாளைய இயக்குனர் ஷோவில் விருதுகளை பெற்றவர். இவர் தொழில் கற்றுக் கொண்ட இடமே ஹாலிவுட்தான்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதிதான் இப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். தெ.மே.ப.கா படத்திற்கு பிறகு வந்த சுமார் ஒரு டஜன் கதையை வேண்டாம் என்று ஒதுக்கிய சேதுபதி இப்படத்தில் நடிக்க காராணம், இந்த கதையின் நேர்த்திதானாம். நானும் கார்த்தியும் நாலு வருடமா பிரண்ட்ஸ். அப்படியிருந்தும் ஸ்கிரிப்டை படிச்சுட்டுதான் இதுல நடிக்கவே ஒப்புக் கொண்டேன் என்றார் சேதுபதி. கிடைக்கிற படத்திலெல்லாம் நடிச்சு சம்பாதிக்கணும்னு நான் சினிமாவுக்கு வரல. ஒன்றிரண்டு படங்களில் நடிச்சாலும் பேர் சொல்ற மாதிரி இருக்கணும் என்கிறார். சேதுபதியின் இ.பி.கோ நல்லதான் இருக்கு. ஆனால் தாக்கு பிடிக்கணுமே?

பீட்சா கடையில் வேலை பார்க்கும் இளைஞராக இதில் நடிக்கிறார் சேதுபதி. இவருக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையேயான காதலை யார் வந்து முறிக்கிறார்கள் என்பதுதான் மிச்ச கதையோ என்னவோ? எதை கேட்டாலும் 'திரையில் பாருங்க' என்று நழுவி ஓடும் கார்த்திக், 'வெயிட்டாக' இருக்கிறார். கதையும் அப்படியே இருக்கக் கடவது.

பின்குறிப்பு- கஷ்டப்பட்டு தமிழை கற்றுக் கொண்டு இப்படத்தில் சொந்தமாக டப்பிங் பேசப் போகிறாராம் ரம்யா நம்பீசன். ஆதினத்துல சொல்லி ஒரு செங்கோல் கொடுக்க சொல்லவா?

Read more »

இமெயிலில் ஜெயலலிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு


முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் மிரட்டல் வந்துள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்தது. அதில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், போயஸ் கார்டன் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர்களுடன் சென்று கோவிலில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பதை உணர்ந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலும் நேற்று இரவு 11 மணிக்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கோவில் மூலஸ்தானத்தை மட்டும் திறக்காமல் மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இது யாரோ பொய்யாக விடுத்த மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
   
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் பாஜக மாநில மாநாடு நடக்கும் நேரத்தில் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி மதுரை அண்ணா நகர் ராமர் கோவில் அருகே சைக்கிள் வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

மூன்றாண்டில் முள்ளிவாய்க்கால்! அனுஷ்டிக்கச் சொல்லி சுவரொட்டிகள் ஒட்டிய புலிகள்!!


notes,notes ltte,ltte,vavuniya,srilanka,tamil news,tamil eelam newsஅரச படைகளால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என அறிவிக்கப்பட்டு இம் மாதம் 18 ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந் நிலையில் அத்தினத்தன்று மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வவுனியா நகரின் பல்வேறு இடங்களிலும் புலிகள் இயக்கதினால் உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்’ தலைப்பிடப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில், ’18.05.2012 அன்று அனைத்து தமிழீழ மக்களும் உணர்வுபூர்வமாக பொது இடங்கள், கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் எங்கள் உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவோம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ‘எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம். புலிகளின் தாகம்… தமிழீழ தாயகம்’ என்று கையெழுத்தால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் உரிமை கோரப்பட்ட நிலையில் இச்சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, மேற்படி சுவரொட்டிகளுக்கு எதிராக ‘தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கத்தினால்’ உரிமை கோரப்பட்ட மேலும் சில சுவரொட்டிகளும் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

அன்பார்ந்த மக்களே’ என்று தலைப்பிடப்பட்ட இந்த சுவரொட்டிகளில், ‘புலிகளின் கெடுபிடியில் இருந்து மீண்டு சுதந்திரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வேலையில் ஒருசில தீய சக்திகளால் புலிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் மீண்டும் ஞாபகப்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் செய்து மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

எனவே இத்தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது, எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவரினதும் கடமையாகும்’ என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read more »

Wednesday, 9 May 2012

புட்டுக்கிச்சு புனே வாரியர்ஸ்... லீக் போட்டிகளுடன் மூட்டையைக் கட்டுகிறது!


ipl 5, cricket, pune warriors, ganguly, ஐபிஎல் 5, கிரிக்கெட், புனே வாரியர்ஸ், கங்குலிஐபிஎல் 5 தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள புனே வாரியர்ஸ் அணி, தொடரின் அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியாமல் லீக் போட்டிகளும் வெளியேறுகிறது. யுவராஜ் சிங் இல்லாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட செளரவ் கங்குலியும், இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 5 தொடரில் துவக்கத்தில் 2 வெற்றிகளை பெற்ற புனே வாரியர்ஸ், அதன்பிறகு அடுத்தடுத்து தோல்விகளை பெற்று துவண்டு போயுள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதிய புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 125 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 5 தொடரின் லீக் சுற்றில் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள புனே வாரியர்ஸ் 4ல் மட்டுமே வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறும். இதனால் அடுத்துள்ள 3 போட்டிகளிலும் புனே வாரியர்ஸ் அணி வெற்றிப் பெற்றாலும், பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் ஏற்கனவே அடுத்த சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த நிலையில், புனே வாரியர்ஸ் 2வது அணியாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

கங்குலியின் எதிர்காலம்:

புனே வாரியர்ஸ் கேப்டன் கங்குலி துவக்க வீரராகவும், மிடில் ஆடரிலும் களமிறங்கினாலும் தொடரின் துவக்கம் முதலே ரன்களை சேர்க்க திணறினார். இதனால் 13 போட்டிகளில் பங்கேற்ற கங்குலி மொத்தம் 261 ரன்களை மட்டுமே எடுத்தார். டுவென்டி20 போட்டிகளுக்கு ஏற்காத வகையில் 100.77 ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார். புனே வாரியர்ஸ் அணியில் உள்ள வீரர்களிலேயே மிகவும் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய வந்த கங்குலி 39 வயதை கடந்தவர். வரும் ஜூலை 8ம் தேதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாட உள்ள கங்குலி, இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

200 இற்கும் அதிகமான வெளிநாட்டுப் போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில் புகலிடம்! – தி சன் நாளிதழ்

srilanka war,tamil movies,tamil news
பிரித்தானியாவில் உள்ள சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 ற்கும் அதிகமான போர்க்குற்றவாளிகள் அங்கு புகலிடம் தேடியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.


படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற மோசமான கொடூரங்களை இழைத்துள்ள போதும் இவர்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாதுள்ளது. ஐரோப்பாவின் மனித உரிமைச் சட்டங்களே அதற்குக் காரணம்.

இவ்வாறு லண்டனில் புகலிடம் தேடியுள்ள போர்க்குற்றவாளிகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா, சியாராலியோன், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாவர்.

கடந்த 18 மாதங்களில் இவ்வாறான 207 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் எல்லை முகவரகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அவர்களில் 12 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவை பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க, இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லண்டனைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளதாகவும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 18 மாதங்களாகப் பணியாற்றியிருந்தார்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அதனை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா.. பெகுராவுக்கு கிடைத்ததால் ஆர்வம்!


2g scam, raja, ராசா, ஜாமீன்
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். 

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மிச்சம் இருப்பது ராசா மட்டுமே.
  Read:  In English 
இந் நிலையில் பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ராசா. இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

ராசா சிறையில் ஓராண்டைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read more »

Ads After Effect

More than a Blog Aggregator
Nichchu Network. Powered by Blogger.