தொடர்புக்கு

infonews2world@gmail.com

facebook.com/news2world

சூடானா பதிவுகள் விளம்பர இணைப்புகள்

Recent Posts Widget | Nichcu Network

புதிய திரைப்படங்களை பார்க்க இப்போதே கிளிக் பன்னுங்க‌

More than a Blog Aggregator

Saturday, 19 May 2012

இயக்குனர் பேரை கேட்டாலே நடுங்கும் நடிகை!!!

tamil movie,tamil cinema
ராம்கோபால் வர்மாவின் பேரை கேட்டாலே பயப்படுவேன் என்றார் மது ஷாலினி.

பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி. தற்போது இந்தி படத்தில்
நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: பாலா படத்துக்கு பிறகு ராம்கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட் படத்தில் நடித்தேன். அடுத்து மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறேன். டிபார்ட்மென்ட் படத்தில் எதைக்கண்டும் பயப்படாத பெண் வேடம். ஆனால் இயக்குனர் வர்மாவின் பேரை கேட்டால் பயந்துவிடுவேன். அவரை இதற்கு முன் பார்த்ததில்லை. துணிச்சலான அவரது பேட்டிகளை படித்திருக்கிறேன். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது கோபமான இயக்குனரிடம் எப்படி நடிக்கப்போகிறோமோ என்று பயந்தேன். இதற்காக வீட்டில் பயிற்சி எடுத்தேன். அது உதவியது. அப்போதுகூட ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பேசுவதற்கு பயமாக இருக்கும். ஆனால் ஒரு ஆசிரியரைப்போல் எனக்கு தைரியம்சொல்லி நடிக்க வைத்தார்.

இன்னும்கூட அவர் மீதான பயம் எனக்கு குறையவில்லை. யாரையும் எளிதில் பாராட்டி விடாதவர் வர்மா. எனது நடிப்பை பார்த்தவுடன் ‘இப்படித்தான் விரும்பினேன். இதையே பின்பற்று என்றார். இப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்தாலும் அவருடன் எனக்கு காட்சி கிடையாது. சஞ்சயத்துடன் நிறைய காட்சிகளில் நடித்துள்ளேன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.

0 comments:

Post a Comment

Ads After Effect

More than a Blog Aggregator
Nichchu Network. Powered by Blogger.