தமிழகம், கோவையில் தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேசியபோது,தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவு குரல் கொடுத்து வருபவர் கலைஞர்.
ஈழத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தி.மு.க. தலைவர் கலைஞர்.
தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பின் விடுதலைப்புலிகள் என்று பேசுவதற்கே தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த தடையை விதித்தவர் தான் ஜெயலலிதா. இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வந்தால் அவருக்கு சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்கும் என்று சொன்னவர் கலைஞர் என்பதை மறந்து விடக்கூடாது.
பிரபாகரனின் தாயார் அதற்கு நன்றி தெரிவித்து கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தின் முடிவில் உங்கள் உடன் பிறப்புக்களில் நானும் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
சிங்களவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருந்தால் புலிகள் எப்போதோ வென்று இருப்பார்கள். ஆனால் சிங்களர்களுக்கு ஆதரவாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருந்தன.
இதனால் புலிகளால் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு தமிழ் ஈழம் ஒன்று தான் தீர்வாகும், அது விரைவில் அங்கு மலரும் என்று தெரிவித்தார்.




0 comments:
Post a Comment