வடக்கு நேபாளில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 21 பேரில 14 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள் உள்பட 21 பேருடன் இன்று காலை தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 21 பேரில் 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 7 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பொகாரா நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசாரும், ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு்ள்ளனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment